டென்ஷனைக் குறையுங்க, மகிழ்ச்சியாக இருங்க

Reading Time: < 1 minute

டென்ஷன் டென்ஷன் டென்ஷன் இந்த வார்த்தையை உச்சரிக்காதவர்களே கிடையாது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை டென்ஷன் என்று கூறுபவர்களுக்கு நிச்சயம் உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்பிருக்கிறது. உலகம் முழுவதும் மே 17 ஆம் நாள் உலக உயர் இரத்த அழுத்த தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று 40-60வயதில் தான் ஒரு காலத்தில் இரத்த அழுத்தம் மாரடைப்புப் போன்றவை ஏற்படும் ஆனால் இன்றோ 20 வயதிலேயே பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் அவர்களுக்கு பக்கவாதம் மாரடைப்புப் போன்றைவை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால் உலக சுகாதார நிறுவனம் மக்களிடையே உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்குக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2005முதல் மே மாதம் 17ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது.

அதிக உடல்எடை,வேலைப்பளு, மனஉளைச்சல் போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக இரத்த அழுத்தத்தின் அளவு 120/80 ஆகும். அது 140/90ஆக இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த அளவைத் தாண்டும் போது தான் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. தலைவலியில் ஆரம்பிக்கும் இது இறுதியில் உயிரைப் போக்கவும் கூடியது.சிலருக்கு குடும்பப் பிண்ணணியும் காரணம்.

இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியம். கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல் எடையில் அக்கறை அவசியம். யோகா செய்து மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மனதை மயக்கும் இசையைக் கேளுங்கள். அடிக்கடி உடல் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். விரைவு உணவுகளைத் தவிர்த்துப் பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள். அதனால் எப்பவும் மகிழ்ச்சியா உங்க மனசை வெச்சுக்கோங்க.டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி

Leave a Reply