தடை அதை உடை .!

Reading Time: 2 minutes

எந்த ஒரு வேலையும் எளிது அல்ல. சாதாரண பெட்டி கடை முதல் பெரும் தொழில்கள் வரை அவரவர் தகுதிக்கும் சூழலுக்கும் ஏற்ப பிரச்சனைகளும் சவால்களும் நிறைந்து காணப்படுகின்றன .

சவால்களை கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்பவர் சராசரி சாமானியர். அத்தடைகளை துணிந்து எதிர்த்து நிலைத்து நிற்பவரே சாதனையாளர்.

நம்மையும் , சூழ்நிலையையும் கூறை கூறி கொண்டே இருந்தால் நாம் கால வெள்ளத்தில் எளிதில் அடித்து சென்று விடுவோம். 

துணிவு , அசட்டு துணிச்சல் இரண்டும் முற்றிலும் வேறுபடும்.  என்றுமே அசட்டு துணிச்சல் ஆபத்தே. துணிவு என்பது இருக்கும் சவால்களை முன்பேஒர்அளவு கணித்து அதற்கு தகுந்தாற்போல் தயார் ஆவதே. 

ஜப்பான் நாடு இரண்டாம் உலகப்போரில் கடுமையாக பாதிக்க்பட்டது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் அதன் பிறகு பிற நாடுகள் சற்றும் எதிர்பாராத வகையில் துறிதமாய் வளர்ந்தது. அதற்கும் காரணம் உறுதி , துணிச்சல் , தன்னம்பிக்கை.

ஆம் , உலகபோரிர்க்கு ஜப்பான் அரசாங்க தலைமை அதிகாரிகள் ஒரு அவசர  ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். 

அதில் பொறியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பிரிவினர் கலந்துக்கொண்டனர்.  அவர்கள் அனைவருக்கும் ” அதிவேக  ரயில்”  வண்டிகான திட்டத்தை தயார் செய்து துரிதமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறபிக்கப்பட்டது.

அனைவரும் மும்மரமாக கலந்து ஆலோசித்து மணிக்கு 65 கிலோமீட்டர் ஓடும் தொடர்வண்டி திட்டத்தை தயார் செய்து வந்தார்கள். 

ஆனால் உதட்டை பிதுக்கிவிட்டு , நாங்கள் எதிர்பார்ப்பது மணிக்கு முன்னூறு கிலோ மீட்டர் வேகம் போகும் ரயில் என்றனர் அரசாங்க தலைமை அதிகாரிகள்.

அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்! மலைகளை சுற்றியே பாதை அமைக்க வேண்டும் , நீர்நிலைகளை கடந்தே பாதை அமைக்க முடியும் , வழி நெடுகிலும் குடிமக்கள் வீடுகள் … 

எப்படி இங்கெல்லாம் நேராக பாதை அமைப்பது?  அவ்வளவு வேகம் சென்றால் பிரேக்கை பயன் படுத்த முடியாதே என்று கலங்கி போயினர் தொழில் நுட்பக் குழுவினர் .

தலைமை அதகாரிகளோ மிகவும் கறாராக ” மலைகளை குடையுங்கள் , குடிமக்களை இடம் பயருங்கள் , தரமான மேம்பாலம் அமையுங்கள் நீர் நிலைகளுக்கு மேலே.  பாதையை நேராக அமைத்தால் வலையத்தேவை இல்லை. வேகம் அவசியம் ” என்றனர்.

நீங்கள் சொல்வது போல் செய்ய செலவு எக்கச்சக்கமாய் ஆகுமே என்றதர்க்கும். ” நாம் போரிடவே நிறைய செலவு செய்திருக்கிறோம் , நாட்டின் உள் கட்டமைப்புக்கு வேண்டி  செலவு செய்ய

மாட்டோமா? என்று எதிர் கேள்வி கேட்டு அவர்கள் வாயை அடைத்தனர்.

பிறகு என்ன மின்னல் வேகத்தில் பணிகள் துவங்கின . உலகிலேயே அதிக வேகமான புல்லட் இரயில்கள் ஜப்பானில் பறக்க துவங்கின. 

தலைநகர் டோக்கியோ மற்றும் ஒசாகா முதல்முதலில் துரித இரயில் மூலம் இணைக்கப்பட்டது.  

அன்று அவர்கள் பின்வாங்கி இருந்தால் இப்படி ஒரு அசுர வளர்ச்சியை அடைந்து இருக்கவே முடியாது. இன்று ஜப்பான் முழுவதும் அத்தகைய ரயில்களின் ஜாலம் தான். 

நாமும் அப்படிதான் சில தயக்கங்கள் , அச்சம் , படபடப்பு ஆகியவற்றை சற்று நிதானமாக அணுகினால் நாமும் சாதனையாளராக மாறலாம் .

நம்மாலும் எல்லாம் முடியும்.! நம்பிக்கையே வெற்றி.

வெல்வோம். 

சா. ரா. 

Leave a Reply