இந்தியவுக்கு இருபதுலட்சம் கோடி!

Reading Time: 2 minutes

இந்தியவுக்கு இருபதுலட்சம்  கோடி!

இருபது லட்சம் கோடி ரூபாய் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக பிரதமர்  இந்தியாவை ஊக்குவித்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார். உலகை ஆட்டிப் படைக்கும் கொரானாவுக்கு சாவலாக இந்தியா மாற வேண்டும் என்ப்தை வலியுறுத்தியுள்ளார்.

 நாட்டின்  நான்காவது ஊரடங்கு:

நாட்டின் நான்காவது ஊரடங்கு   காலத்தைப் பிரதமர் அவர்கள் அறிவித்துப் பேசியுள்ளார். இந்தியா தொடர்ந்து  4வது ஊரடங்கு காலத்தைத் தொடர வேண்டியுள்ளது என்பதை  நாட்டின் பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளார்.  இந்தியா கடந்த 4 மாதங்களாகக் கொரானாவினால் பெரிய அளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 தனிமனிதன் மற்றும் தொழில்கள், வேலைகள் ஆகிய அனைத்தும் நாட்டில் முடங்கியுள்ளது. கோவித்-19 உலகை பெரும் அளவில் பாதித்துள்ளது., இந்தியாவில் கோவித்-19  தாக்கம் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.   கொரானாவின் தொற்றால் நாட்டின் முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்துக் காணப்படுகின்றது.   கொரனா பாதிப்பால் உலகம் மிகுந்த உயிரிழப்பைச் சந்தித்த பொழுதும்  இந்தியாவிலிருந்து  ஹைட்ராக்சின் மருந்துகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

உலகத்தை வழி நடத்தும் இந்தியா:

இந்தியா உலகத்தை வழிநடத்தும் மிகப் பெரிய சக்தியாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர வேண்டும் என்பதை   நாட்டின் பிரதமர் மக்கள் முன்னிலையில் இதனை  அறிவித்திருந்தார். இந்தியா உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது கொரானாவை சிறப்பாக  எதிர்கொண்டது. நாட்டின் மிகப்பெரிய  மக்கள் தொகையை இந்தியாவால் பாதுகாக்க முடிந்துள்ளது. எனினும் இந்தியா தனது பொருளாதார இழப்பைச் சந்தித்து நிற்கின்றது.

இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் இதுவரை இந்தியாவில் தயாரிப்புகளை  முக்கியத்துவம் கொடுத்து வந்தோம்.  அதுபோல்  இந்தியாவில் தன்னிறைவு பொருளாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க  வேண்டும் என்பதை மோடி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  இந்தியா உலகில் நடக்கு  பல மாற்றங்களை இந்தியா முழுமையாகக் கவனித்து வருகின்றது. இந்தியாவை தற்பொழுது பொருளாதார வளர்ச்சியை  முன்னிருந்திச் செய்லபட வேண்டும்.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிகாக இந்தியா ரூபாய் 20 லட்சம் கோடி திட்டங்கள்  அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.  அதனை நாட்டின் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவிக்கவுள்ளார்.

 நாட்டின் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய பொருப்பில்  நாம் அனைவரும் இனைந்து செயல்பட வேண்டும்.  அரசின் இந்தப் பொருளாதார வள்ர்ச்சிக்கான  திட்டமிடலில்  நாட்டு மக்கள் முழுமையாக அறிந்து அதனை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்த வேண்டும்.   21ஆம் நூற்றாண்டில்  இந்தியா கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களையும் நாட்டையும் முன்னேற்றப் பாதையில்  நடத்திச் செல்ல வேண்டும்.

பொருளாதார சுயசார்பை  இந்தியா பின்பற்றி உலகை வழிநடத்த வேண்டிய கட்டத்தில் இருக்கின்றார். இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களில் அதிமுக்கியமான   இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் வளர்ச்சியை இது   நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்தியாவின்  ஜிடிபி வளர்ச்சியையும் அதனுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை  விவசாயம், தொழில்த்துறையில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும்.  பொருளாதார தன்னிறைவு என்பது மிகவும் அவசியமானது ஆகும்.

 நாட்டின் உற்பத்தியை அதிகரித்து உள் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்து  ஏற்றுமதியையும் இந்தியா அதிகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாத்காரத்தின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கக் காரணியாக இருப்பது மொத்த தேசிய உற்பததியான ஜிடிபியாகும்.  இதன் வளர்ச்சியை நாம் முன் வைத்துச் செயல்பட வேண்டியது  ஒரு நட்டின் வளர்ச்சி மற்றும்  முன்னேற்றத்திற்கு உதவும்

Leave a Reply