கடமைக்கு பின் தான் ஞானம்!

Reading Time: 2 minutes

ஒலிப்பது ஒரு குரல் அல்ல பல குரல்கள் எவன் கடமையில் இருந்து விலகுகிறாரா அவனுக்கு என்றும் ஞானம் கிட்டாது என்கிறது கீதை! இது என்னுடைய மனதில் உள்ள புதைந்து கிடக்கும் குமுறல் இந்த இயக்கம் என்று யாரையும் குறிப்பிட்டு புண்படுத்தவில்லை பல இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன முதலில் குடும்பம் அதில் உள்ள தாய் தந்தை மனைவி சகோதரர் என அன்பு வட்டம் விரிந்தால் தான் கடமைகளும் முறையாகபடும். அதன் பயனாக ஞானம் பெறமுடியும் இறைவனது படைப்பில் நியதியும் அதுதான்.

என் மனதில் உள்ளதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என் மாமா பையன் அந்த இயக்கத்தில் சேர்ந்து குடும்பத்தை விட்டு விலகி ஏழு எட்டு மாதங்கள் அவர்களுடன் தங்கிய பிறகு அவர்கள் சுயரூபம் தெரிந்தவுடன் மிகவும் சாமர்த்தியமாக அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்தான் இதனால் அவனுக்கு ஒரு வருடம் படிப்பும் வீணானது. முதலில் யோகா என்றுதான் பிரபலமான ஒரு மையத்துக்குள் சென்றேன். அவர்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது.

ஏற்கனவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடைய நான் அந்த இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டேன் அதனால் நான் கேட்ட கேள்விகளுக்கு என்னுடைய அதீத ஆர்வமும் துடிப்பும் அவர்களைக் கவர்ந்தது ஆனாலும் என் மனம் மட்டும் மிகவும் தெளிவாக இருந்தது முதலில் என் குடும்பம் பிறகுதான் மற்றவை எல்லாம் என்று ஆன்மீகத்திற்கு என்று ஒரு வயது கால கட்டம் ஒன்று உண்டு அதுவரை நான் பொறுத்திருந்து முதலில் வீட்டுக்கு தேவையான கடமைகளைச் செய்த பிறகு ஆன்மீக சேவை செய்யலாம் என்று எனக்குள்ளேயே நான் தெளிவாக இருந்த காரணத்தால் நான் அவர்களை நோக்கி இழுக்கப்படும். அதை அறிந்து அதிலிருந்து என் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன் இப்போது அதிலிருந்து நல்ல கருத்துக்களை மட்டும் மனதில் நிறுத்தி வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.

தினமும் வரும் மிகவும் வயதான பூக்காரம்மா பூ கொடுத்துக்கொணடு வந்தார்கள் என்ன விஷயம்”என்ன விஷயம்” என்றதும் நான் இயக்கத்தினால் ஆன வேதனைப் பற்றியும் இது போன்ற ஆன்மீக இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டுமென சொன்னதும் வயதான பூக்காரம்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஆன்மீக இயக்கம் இறக்கத்தை உயிர் என்றாள் அரசியல் இயக்கம் உயிரையே உறிஞ்சி விடும் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்த என் மகனை போராட்டம் நடத்த இழுத்து நல்ல படிக்கிற பையனை போஸ்டர் ஒட்ட வைத்து மூளை சலவை செஞ்சாங்க கொஞ்சம் கொஞ்சமா என் மகனுக்கு சாராய பழக்கத்தை ஏற்படுத்தி அடிதடி ரகளை அவன உறிஞ்சிவிட்டு போராட்டம் தியாகம் அது இதுன்னு என் குடும்பத்தில் இருந்து என் மகனை பிரிச்சு கடைசியில அவன அந்த இயக்கத்திற்காக தீக்குளித்த வச்சுட்டாங்க அம்மா அவ நாட்டமுள்ள இலவசங்களையும் பிரிச்சி கடைசியில அவன அந்த இயக்கத்துக்காக கொடுத்துட்டு இப்போ அம்போன்னு நிக்கறேன்.

ஆன்மீக இயக்கம் வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு அர்ஜி அனுப்புறது விட அரசியல் இயக்கத்தை கட்டுப்படுத்த எழுதி தாயே இத்தகைய இயக்கங்கள் வளர காரணமே நம்முடைய அறியாமையே வலிமைவாய்ந்த பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் நிறுவனஙகள்தான் சகட்டுமேனிக்கு எல்லாவற்றுக்கும் விளம்பரம் முக்கியத்துவம் தரப்படுகிறது ஆதாரமின்றி உண்மை நிலை தெரியாமல் இவற்றின் மூலம் இயக்கப்படுகிறது மக்கள் கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு இம்மாதிரி வளரும் அமைப்புகளை நாம்தாம் அடக்க வேண்டும் நம் மனதை அடக்கி வீட்டிலேயே தியானம் பூஜை செய்யவோ பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் தற்காலத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு வழி ஏனெனில் மக்கள் இப்போது அதிக பிரச்சனைகளாலும் மன அழுத்தத்தாலும் அவதிப்படுகிறார்கள் வசதி வாய்ப்பு அதிகம் எனவும் ஆகிவிட்டதால் மனிதர்களுக்கு மிகவும் குறைந்து விட்டதால் யாராவது நம் மனதிற்கு ஆறுதல் சொல்லும்படி நம்பிக்கையூட்டும் படி அழகாக சொன்னாள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்கள் அதில் சீக்கிரம் மாட்டிக்கொள்கிறார்கள்.

அந்த வலையில் இருந்து வெளிவர இன்னொரு ஆன்மீக ஆள் தேவைப்படும். இது என்ன பைத்தியக்காரத்தனம் சட்டம் போட்டு இவற்றை மாற்ற முடியுமா? நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் மனிதர்களைவிட அந்த ஆண்டவனை நம்புங்கள் மனிதர்களிடம் கொண்டு பணத்தை கொட்டுவதை விட கோயிலுக்குச் செல்லுங்கள் இரண்டு விளக்கேற்றிவிட்டு மெய்யுருகி வேண்டிக் கொண்டு வாருங்கள் முடியவில்லையா வீட்டிலேயே சுவாமிக்கு விளக்கேற்றி வீட்டில் எளிமையாக அமைதியாக அதன் முன் ஒரு பத்து நிமிடம் அமருங்கள் மிகவும் ஏழை பட்டு தேவைப்படுபவர்களுக்கு நம்மால் ஆனதை செய்தால் அந்த ஆண்டவனே இறங்கி வருவான் மனத்திடமும் நம்மேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையுமே நம்மை காப்பாற்றும். வாழ்க இறையுடன் வாழ்க வளமுடன்.

Leave a Reply