சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க

Reading Time: < 1 minute

நகைச்சுவை உணர்வு என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். எவ்வளவு தான் டென்ஷன் இருந்தாலும் ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்த்தால் நாம் சிரிக்க ஆரம்பிச்சிடுவோம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரது சிரிப்பும் சிறப்பு.


இன்றையக் காலக்கட்டத்தி்ல் அனைவரும் பரபரப்பான சூழலில் ஓடிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொணருங்கள். வாழ்க்கையை இன்னும் சுவாரஸ்யமானதாக்க நிச்சயம் சிரிப்பு தேவை.சிரிப்பு நம் கவலைகளை மறக்கச் செய்கிறது. நம் மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ள உதவுகிறது.


சிரித்து வாழ வேண்டும் என்பார்கள். உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் முகத்திலும் சிரிப்பு இருக்கும். காலை எழுந்தவுடன் உங்கள் இணையின் அருகில் சிரித்த முகத்துடன் செல்லுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் இணையும் புத்துணர்ச்சிப் பெறுவார். குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான் சிரிப்பு.
இன்று பலர் டென்ஷனைக் குறைப்பதற்காக தினமும் பதினைந்து நிமிடம் சிரிக்கிறார்கள். அதைத்தான் அன்றே சொன்னார்கள் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று. சிரிப்பால் நம் உடலில் உள்ள இரத்த அழுத்தம் குறைந்து உடல் சீராகிறது. நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது.


எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருங்கள். அதனால் நீங்கள் எப்போதும் கூலாக இருப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த நகைச்சுவைக் காட்சியைப் பாருங்கள். உங்கள் பிள்ளைகளையும் அடிக்கடி சிரிக்கச் சொல்லுங்கள். உங்கள் சிரிப்பு உங்கள் இணையையும் சிரிக்க வைக்கட்டும். மனசு விட்டுச் சிரித்தாலே  கவலைகள் அனைத்தும் மறந்துவிடும். சிரிப்பதால் நாம் மிகவும் இளமையாக இருக்க முடியும். வெளிநாட்டில் நடத்திய ஆய்வில் பத்தில் எட்டுப் பேர் நாங்கள் சிரிப்பதால் தான் எங்களுடைய உடல் நலமாக உள்ளது எனக் கூறியுள்ளனர்.


ஒரு ஊரில் ராம் சாம் என இருவர் இருந்தனர்.   இருவரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது. ராம் சந்திரா தம்பதியினர் தங்கள் வருவாயைக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர் ஆனால் சாம் துர்கா தம்பதியர் வீட்டில் எப்போதும் இருவருக்குள்ளும் சண்டை தான். இப்படியே நாட்கள் சென்றன. 


ஐந்து வருடம் கழித்து ராம் மற்றும் சாமைப் பார்க்க அவர்களது தோழன் ராஜ் வந்தான். அவன் அவர்களிடம் எப்படி ராம் நீ மட்டும் இவ்வளவு இளமையாக இருக்கிறாய் என்னைப் பார் எப்படி முதியவர் போல் இருக்கிறேன் எனக் கேட்டான். அதற்கு ராம் நான் தினமும் என் குடும்பத்தோடு பேசி சிரிப்பேன் அதனால் என் மனதில் கவலைகள் இல்லை முதுமையும் இல்லை என்றார்.


நீங்கள் சிரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடனிருப்பவரையும் சிரிக்க வைத்து அழகுப் பாருங்கள். நாள்முழுக்க சிரிச்சுக்கிட்டே இருங்க வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க.

Leave a Reply