ஓ! மை கடவுளே’ – திரைப்பார்வை

Reading Time: 2 minutes

ஓ! மை கடவுளே’ – திரைப்பார்வை👍

வாட்ஸ்அப் போல் வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும். செய்த தவறை திருத்திக் கொண்டு மீண்டும் ஒரு முறை சரியாக வாழலாம். ஆனால் அனைத்தும் சரியாக அமைந்து வாழ்வது தான் வாழ்க்கை என நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட படிப்பினையின் பிம்பத்தை நம் அன்றாட வாழ்க்கையிலும் எதிர்பார்க்கும் பொழுது தான், ஓ! மை கடவுளே! என்று கடவுளை திட்ட எத்தணிக்கிறோம்.

வாழ்க்கையில் நாம் புரட்டிய பக்கங்களையும், நம் கண்ணின் வெளிச்சத்தில் பட்ட எழுத்தக்களை மட்டுமே வைத்து வாழ்க்கை முடிவதற்கு முன்பே நாம் ஒரு முடிவிற்கு வந்து விடுகிறோம்.

கண்ணதாசனின் பிரபலமான கவிதை ஒன்று எல்லோரும் படித்திருப்பீர்கள்.


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

  • கண்ணதாசன்

வாழ்க்கையை நாம் வாழ்வதே, வாழ்வினில் கடவுளைத் தேடத்தான். நாம் சேர்த்த அனுபவ தூசி மூட்டைகளை வைத்துக் கொண்டு ஆண்டவனை எடை போட முயல்கிறோம். விளைவுகள் நம்மை மீறியதாகும் பொழுது சரணடைகிறோம்.

ஓ! மை கடவுளே படம் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பிடித்து இணைந்த வாழ்க்கை, பிடிக்காத சில எழுத்துப் பிழைகள், அதற்காக எழுதியதை டெலிட் செய்துவிட்டு மீண்டும் எழுத முடியுமா.

கல்யாணத்திற்கு முன் இனிப்பாகவும், பின்
பிணக்காகவும் தொடரும் நாயகன் நாயகி வாழ்வில், ஒரு கட்டத்தில் டைவர்ஸ் என உச்சத்தை எட்டுகிறது. எப்பொழுதும் கடவுளை திட்டுவோம், அதிலும் நமக்கு பிடிக்காத ஒன்று நடக்கும் பொழுது கடவுளின் சட்டையைப் பிடித்துக் கேட்போம். அப்படி நாயகன் கேட்கும் பொழுது தான் ஆஜராகிறார் கடவுள்.

நாயகனின் அனுபவத்தைக் கேட்ட கடவுளே துண்டு சீட்டுக் கொடுத்து வாழ்ந்த வாழ்க்கையை புரட்டிப் போடுகிறார். ஒரு அறிஞனின் அறிவோ, சாமானியனின் அறிவோ எல்லைக்கு உட்பட்டது. அதை வைத்துக் கொண்டு இது சரிபடாது என்று வாழ்க்கையில் எந்த வொரு முடிவுக்கு வருவதும் தவறாகும்.

கடவுளின் துருப்புச் சீட்டோடு நாயகன் மறு வாழ்க்கையில் கண்டு கொண்டது என்ன?

டைவர்ஸ் கிடைத்ததா இல்லையா? கடவுள் நிஜத்தில் நன்மையை தான் செய்கிறாரா? என்ற பல கேள்விகளுக்கும் விடையாக அமைகிறது படம்.

கடவுள் அமைத்து வைத்த மேடை (வாழ்க்கை) வாழ்வதற்கே!

கட்டாயம் பாருங்கள்!

ஓ மை கடவுளே!

Leave a Reply