எது துரோகம்?

Angry @pexels
Reading Time: 2 minutes

பள்ளி தேர்வில காப்பி அடிக்கரதா ?, வீட்ல பெத்தவங்களுக்கு தெரியாம செய்யர சின்ன சின்ன திருட்டா? , சகோதர சகோதரிகளுக்கு நடுல ஏற்பட்ட சண்டைய பெத்தவங்க கிட்ட தனக்கு சாதகமாக மாத்தி சொல்றதா?இன்னும் வாழ்க்கையின் வேறு பல கோணங்களில் இதை யோசிப்போம் வாங்க..

நண்பனின் சாக்லேட் முதல் காதலி வரை எது வேணும்னாலும் நம்மால பறிச்சிக்க முடியும்னு ஆணவமா செய்யற செயல் தான் துரோகமா?நாகரீக முன்னேற்றம் எனும் பெயரில் அங்கங்கள் மறைக்க உடையாணியமல், அவற்றை வெளிப்படுத்தி நமக்கு நாமே பாதுகாப்பின்மை என்னும் துரோகம் இழைக்கிறோமா?

அம்மா குழந்தையை அக்கம்பக்கத்து வீட்டாரை நம்பி விட்டுவிட்டு செல்லும் போது, பெரிய தவறேதும் நடந்து விடுமோ என்ற பயம் கொள்ளும் இடமாக சமூகத்தை ஆக்கியது துரோகமா?

பெற்று வளர்த்த பெற்றோரை ஆனாதை இல்லத்தில் சேர்த்து வளர்த்த பெருமையை குலைப்பது துரோகமா?நம்பி வந்த மனைவியின் குரலை கூட கேட்க விரும்பாமல் தொலைக்காட்சியிலும் அலைபேசியிலும் மூழ்கி இருந்து அவளை தேவையை தீர்க்கும் பொருளாகவும், வீட்டு வேலை செய்யும் கருவியாகவும் நடத்துதல் துரோகமா?

இந்த தனிமையினால் அவள் வேறொருவன் வலையில் விழுவது துரோகமா? இல்லை தன் பேச்சையும் ஒருவன் கேட்க இருக்கிறானே என புதிய வாழ்வை தொடங்க பெற்றெடுத்த பிள்ளைகள் தடையாய் இருப்பதாய் எண்ணி அவர்களை வெட்டி கொல்வது துரோகமா?

மற்றொரு கோணத்தில் யோசித்தால் பெற்ற தாயையே பணத்திற்காகவும் போதை பொருளிற்காகவும் கொலை செய்கிறார்களே அது துரோகமா? , பணமே பிரதானம் என நினைத்து காதலி/மனைவி/பெற்ற குழந்தையை கூட விற்க துணிகிறார்களே அது துரோகமா?

ஓட்டு போட்ட மக்களின் தலையை மொட்டையடித்து விளையாடும் அரசியல்வாதிகள் செய்யாத துரோகமா? கல்வி முதல் மருத்துவம் வரை அனைத்தையுமே வணிகமாயக்கி பணம் சேர்க்கும் வழிகள் என்றாக்கி அதன் உண்மையான தேவையை பூர்த்தி செய்யாமல் பணம், பதவி , அதிகாரம் என்னும் சூழலில் சிக்கியது , சிக்கவைப்பது இவை துரோகமா?

இயற்கை வளங்களை அழித்து நாளைய சந்ததியினரை சந்தியில் நிற்கும்படி செய்வதா துரோகம்?

மேற்கூறிய எதுமே துரோகமில்லை, உங்க புருவங்கள் உயர்வது தெரியுது. தொடர்ந்து படிங்க புரியும். மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் சரினு சொல்லல ,

அதே நேரம் அது எல்லாத்தையும் சரியா தப்பானு மட்டும் பாக்குற மனபக்குவதுக்கு வாங்க. அந்த கண்ணோட்டத்துடன் பாத்தா அதெல்லாம் தவறு, மிக பெரும் குற்றங்கள் இந்த வகையைச் சேர்ந்தது. அப்போ எது தான் துரோகம்னு நீங்க கேக்கரது புரியுது.

கடவுளால் கொடுக்கப்பட்ட அற்புதமான உயிர் என்னும் பொக்கிஷத்தை தவறிழைத்த பேதைகளுக்காக அழிப்பதே துரோகம்.தற்கொலை என்னும் எண்ணமே துரோகம், தாயின் பிரசவ வலியை உணர்ந்த எவராலும் எளிமையாய் உயிரை போக்கி கொள்ள முடியாது.

நீங்கள் வெறும் நீங்கள் மட்டும் இல்லை, நீங்கள் யார் என ஆழ்ந்து யோசித்தால்,உங்கள் தாயின் ஒன்பது மாத தவம்”.ஒன்பது மாதங்கள் இருட்டு அறையில் தனிமையில் இருந்து போராடி வெளியே வந்த எந்த குழந்தையும் வாழ்வின் எவ்வித போராட்டத்தையும் எதிர்கொள்ள சக்தி கொண்டவர்களே. என்னை பொருத்தவரையில் எத்தனை பாதாளத்தில் வீழ்ந்தாலும் சீறிக்கொண்டு மேல் எழ முயல்பவரே தன் தாயின் தவத்திற்கு கைமாறு செய்பவன்.

Leave a Reply