குப்பைமேனியின் பயன்கள்

Reading Time: < 1 minute

நமது அருகில் இருக்கும் சில மூலிகைகளின் பயன்கள் நமக்கு தெரியாமலே போய்விடுகிறது. நமது வீட்டு அருகிலே வளர்ந்திருக்கும் இந்த குப்பைமேனி செடி வளர்ந்திருக்கும் இந்த குப்பைமேனி செடிகள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த குப்பைமேனி இலையை சருமத்தில் பயன்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகள் பருக்கள் கரும்புள்ளிகள் போன்றவற்றிற்கும் பலவகையான சரும பிரச்சனைகளுக்கும் இந்த குப்பைமேனி இலை மருந்தாக பயன்படுகிறது. மேலும் சில சரும நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

குட்டி மீசை தொல்லையா?

உதட்டின் மேல் மீசை முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம். குப்பைமேனி இலை வேப்பம் பூ, விராலி மஞ்சள், இவற்றை சேகரித்துக் கொள்ளுங்கள், இவற்றை மாவு போல் நன்றாக அரைத்துக் கொண்டு படுக்கைக்குப் போகும் முன் உதட்டின் மேல் பூச வேண்டும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து அருவருப்பான முடிகள் உதிர்ந்து பளிச்சென்று இருக்கும்.

கரும்புள்ளிகளுக்கு குப்பைமேனி இலை மஞ்சள் குப்பைமேனி இலை மஞ்சள் பூண்டு மை போல் அரைத்து கரும்புள்ளி பருக்கள் மீது தடவி வர முன்பு இருந்ததுபோல் இயல்பு நிலைக்கு மாறும்.

முடி வளர்ச்சி தடைபடும்………

மஞ்சளுடன் குப்பைமேனி இலையை அரைத்து பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வரும் தேவையற்ற முடிகள் காணாமல் போகும் முகம் அழகு கூடும். சொறி சிரங்கு………..

குப்பைமேனி இலை உப்பு மஞ்சள் இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்து வந்தால் சொரி சிறங்கு படை அனைத்தும் குணமாகும். எல்லா வகையான புண்களுக்கும் மஞ்சளுடன் சேர்த்து பூசி குளித்து வந்தால் குணமடையும் , சரும அழகும் கூடும்.

உடல் அழகிற்கு…….. பத்து குப்பைமேனி இலையை பசும்பாலுடன் அவித்து உண்டு வந்தால் உடல் அழகும் ஆரோக்யமும் கிடைக்கும்.

தீக்காயங்களுக்கு………..

குப்பை மேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண் நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம், தீக்காயம் பட்ட புண்களுக்கு பூசினால் விரைவில் குணமடையும்.

குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள்: குப்பைமேனி கசப்பு மற்றும் கார சுவை வெப்பத்தன்மை தன்மையை கொண்டது. மார்பு சளி சுவாச கோசம் கீல்வாதம் முதலியவைகளையும் போக்கும். குப்பைமேனி இலை வேர் ஆகியவை வாந்தியை உண்டாக்கும் பயன்படுகின்றன. குப்பைமேனி இலை தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும் பருமன் கொழுப்பை குறைக்கும் குப்பைமேனி தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும் சாதாரணமாகவும் பரவிக் காணப்படுகின்றது ஒரு இரண்டரை அடி வரை உயரம் உள்ளது.

குப்பை மேனி செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து லேசாக நசுக்கி தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி வடிகட்டி குடித்தால் சளி இருமல் கட்டுப்படும்.

Leave a Reply