காற்றில் பரவும் பாலியல் வன்முறை

காற்றில் பரவும் பாலியல் வன்முறை
Reading Time: 3 minutes

அன்றாட வாழ்க்கையின் அத்தியாவிசிய தேவைகளில் இப்பொழுதெல்லாம் வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக்கும் கலந்து விட்டன. இரு தினங்களுக்கு முன் எல்லொருடைய வாட்ஸ்அப் முன்னோக்குகளிலும் கொரனா விழிப்புனர்வு வாசகத்தைப் போல இவ்வுலகில் உள்ள கணவன்மார்கள் மனைவிமார்களிடம் போரடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களைக் காப்பற்ற எல்லோரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்றும் மாற்றி மாற்றி கதறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த கொரானா முடக்கதின் போது தான் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. யாரை யார் காப்பற்ற வேண்டும் என்று தான் புரியவில்லை. ஒரு பாலினத்தைச் சாடும் வாட்ஸ்அப் முன்னோக்குகள் ஆயிரக் கணக்கில் இன்றும் வலைதலத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றன.  

வாட்ஸ்அப் நகைச்சுவை முன்னோக்கிகளில் பெண்களைப் பற்றி பல பொய் அடையாளங்களை இஷ்டம் போல பரப்புகிரார்கள். இதுவும் ஒரு வகை பாலியல் வன்முறை தான் என்பதை இவர்களுக்குப் புரிய வைக்க விரும்புகிறேன். அதிலும் இது போன்ற வதந்திகளை அதிகம் பரப்புவதும் சில பெண்கள் தான்.

ஒரு நாள் அழகிய காலைப் பொழுதில் வாட்ஸ்அப் செயலியை நோக்குகிறேன். அச்செயலியில் எனக்காக என்ன செய்திகள் காத்திருக்கின்றன?

குடும்பம், நண்பர்கள், சகாக்கள், அயலவர்கள், பள்ளித் தோழர்கள், கல்லூரித் தோழர்கள், முன்னாள் சகாக்கள், மகனின் பள்ளியிலிருந்து சக தாய்மார்கள் மற்றும் முன்னாள் ஆண் நண்பர்களிடமிருந்து உற்சாகமான மற்றும் பெரும்பாலும் அசிங்கமான மலர் பூங்கொத்துகள் மற்றும் தூண்டுதலான மேற்கோள்களுடன் தொடர் ‘குட் மார்னிங்’ வாழ்த்துக்கள். பல விருப்பங்களுடன் எனது நாள் நன்றாக மட்டுமல்ல, சிறந்ததாகவன்றோ இருக்க வேண்டும் மாறாக சலிப்பாகவும் பெரும்பாலும் சவாலாகவும் மாறிவிடுகின்றன. நாட்கள் தொடர, இந்த பூக்கள் மற்றும் படங்கள் முன்னோக்கி அனுப்பப்பட்ட ஒரே மாதிரியான நகைச்சுவைகள் மற்றும் மீம்ஸ்களாய் மாறிவிடுகின்றன.

பெரும்பாலான நகைச்சுவைகளில், பெண்கள் வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். இந்த நகைச்சுவைகளை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கூட ரசிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். நான் ஒரு சில பெண்கள் மட்டுமே உள்ள குழுக்களிலும் உறுப்பினராக இருக்கிறேன், அந்தக் குழுக்கள் கூட இந்த முன்னோக்குகளில் இருந்து விடுபடுவதில்லை.

நான் நினைக்கிறேன், பூக்கள், டெட்டி கரடிகள் மற்றும் ஊக்கமளிக்கும் செய்திகளை விட இந்த நகைச்சுவைகள் எல்லோரையும் மகிழ்விக்கின்றன என்று. மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் தவறான புரிதலையும் வெறுப்பையும் கூடவே விதைத்துச் செல்கின்றன. நான் எல்லாவிதமான ஸ்டீரியோடைப்களையும் வெறுக்கிறேன், அது ஆண்களைக் கொச்சப் படுத்துவதாக இருந்தாலும் சரி. ஆண்களில் கற்பழிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக என் தந்தையையும் நான் வெறுக்களாகுமோ? பெண்களுக்கு எதிராகப் பரவிவிட்ட சில ஸ்டீரியோடைப்களை உங்களுக்காகத் தருகிறேன். அவற்றின் பின் உள்ள உன்மைகளை நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்.

1.பெண்கள் ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் ஷாப்பிங் மால்களில் மணிக்கணக்கில் நேரம் செலவிடுகிறார்கள். 
பதில்: அப்படியா? எல்லா பெண்களுமா? நான் இல்லை! என்னை பிரதிபலிக்கும் லட்சக் கணக்கானவர்களை நான் அறிவேன். ஆண்கள் ஷாப்பிங் செய்ய விரும்பவில்லையா? இல்லையென்றால், ஆண்களை அழகுபடுத்தும் பில்லியன் கணக்கான பொருட்கள், உடைகள், பாகங்கள் ஏன் நம்மிடம் உள்ளன? ஆண் சகாக்களோடு கடைக்குச் சென்று அவர்களுக்கான ஆடையை அவர்கள் தேர்வு செய்யும் வரை நானும் மணிக் கணக்கில் காத்திருந்திருக்கிறேன். 
2.பெண்கள் தங்கள் அலமாரி துணிகளால் நிரம்பி வழிகிறது என்றாலும் துணிகளை வாங்கிக் கொண்டே இருப்பார்கள். 
பதில்: அநேகமாக, சோனம் கபூர் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் விளம்பரங்களில் இதை செய்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லா பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
3.அவர்கள் அதிக மேக்கப் அணிவார்கள். மேக்கப்பின் அடுக்குகள் எண்ணில் அடங்காதவை.
பதில்: அதாவது அன்னை தெரசா, பி.டி.உஷா, கிரண் பேடி, மம்தா பானர்ஜி மற்றும் உங்களுடைய அன்னை ஆகியோர் உண்மையிலேயே பெண்கள் அல்ல? அப்படித்தானே? உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான வறிய பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவைப் பெறுவதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள், அவர்களால் அலங்காரம் பற்றி யோசிக்கக்கூட முடியாது. அவர்களின் முகத்தில் வறுமையின் கோடுகள் மட்டுமே உள்ளன. அலங்காரம் என்பது ஒரு தேர்வு, பெரும்பாலான பெண்களுக்கு அது அவசியமில்லை.
4.அவர்கள் வதந்திகளை விரும்புகிறார்கள்
பதில்: மஞ்சள் பத்திரிகை, நடுபக்க நக்கி போன்றவை ஆண்களால் தொடங்கப்பட்டவை. உலகெங்கிலும் உள்ள டேப்ளாய்டுகளில் பெரும்பாலும் ஆண் பத்திரிகையாளர்கள் உள்ளனர். கிசுகிசுக்கள் என்பது பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டவை அல்ல.
5.அவர்கள் கண்ணாடியின் முன் நேரம் அதிகம் செலவிடுகிறார்கள்
பதில்: அநேகமாக அவர்கள் செய்கிறார்கள். பலர் காலையில் எழுந்து கண்ணாடியை வெறித்துப் பார்த்து, முந்தைய இரவு தங்களுக்குக் கிடைத்த வடு அல்லது காயங்கள் அல்லது நீல நிற அடையாளங்களை ஆராய்கின்றனர். நான் ஏன் இந்த கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டேன் என்று யோசித்துக்கொண்டே அவர்கள் வெறித்துப் பார்க்கிறார்கள். அவர் என்னை நேசிக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த காயங்கள் காதலா?” என்ற எண்ணம் அவர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். 
6.கணவரின் மீது உளவு பார்ப்பதே அவர்களின் ஒரே வேலை
பதில்: ஆமாம், அவர்கள் உளவு செய்கிறார்கள், அவர்கள் சமையல், சுத்தம்,சலவை செய்தல், குழந்தைகளை குளிப்பாட்டுவது, குழந்தைகளுக்கு உணவளிப்பது, வீட்டுப்பாடம் மற்றும் பள்ளித் திட்டங்களுக்குக் குழந்தைக்கு உதவுவது போன்ற எல்லா வேலைகலையும் முடித்து விட்டு நேரம் கிடைத்தவுடன் மட்டுமே… அப்படி என்றால் நீங்கள் அவர்களின் சமூக தளங்களின் கடவுச் சொல்லை அறிந்து வைத்திருப்பது.. அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்கள் செல்பேசியைச் சீண்டுவது..இதெல்லாம் என்னவாம்?
7.அவர்கள் வைரங்களையும் தங்கத்தையும் அதிகம் விரும்புகிறார்கள்
பதில்: அவர்களுக்கான அன்பு, மரியாதை மற்றும் சமாதானம் வழங்கப்பட்டால், யார் தான் தங்கத்தை விரும்புவார்கள்? நகைக் கடைக்கு பதிலாக புத்தகக் கடைக்கு விரைந்து செல்லும் பெண்கள் பலரை நான் அறிவேன். தங்கத்தில் ஜொலிக்கும் ஆண்கள் பலரையும் அறிவேன்.
8.அவர்கள் செல்பி கிளிக் செய்ய விரும்புகிறார்கள்
பதில்: ஆண்களும் தான் செய்கிறார்கள். உங்கள் செல்பேசியில் உங்களது செல்பிக்கள் ஏதும் இல்லையா? 
9.   கணவன்மார்கள் மனைவிகளைப் பார்த்து பயப்படுகிறார்கள்
பதில்: இது தான் மிகவும் கேடுக்கெட்ட ஸ்டீரியோடைப். திருமணமான பெண்கள் கொல்லப்படுவதிலிருந்து பாதுகாக்க சிறப்பு சட்டங்களை விதிக்க வேண்டிய ஒரு நாட்டில், இது மிகவும் அபத்தமான ஸ்டீரியோடைப் ஆகும்.
10. பெண்கள் ஊமை
பதில்: பெண்கள் ஊமை என்று நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த நகைச்சுவைகளைப் பார்த்தும் நாங்கள் சிரிக்கிறோம், மேலும் ROFL, LOL, LMAO மற்றும் சிரிக்கும் ஸ்மைலிகளை அனுப்புகிறோம். நாங்கள் ஊமையாக இல்லாதிருந்தால், இந்த நகைச்சுவைகளையும் மீம்ஸையும் இணையம் முழுவதும் பரப்ப அனுமதிக்க மாட்டோம். புன்னகைக்குப் பதிலாக, இந்த நகைச்சுவைகளை யார் முன்வைக்கிறார்களோ அவர்களுக்கு நாங்கள் துப்பாக்கிகளை அல்லவா அனுப்ப வேண்டும்.
பத்துப் போதும். என் கை வலிக்கிறது. முழுமையான பட்டியலை என்னால் தட்டச்சு செய்ய முடியாது. செய்தாலும் பலருக்குப் புரியாது. புரிந்தாலும் சிலர் திருந்தப் போவதில்லை.
இந்த நகைச்சுவைகளை அனுப்பும் ஆண்கள் பெரும்பாலும் எங்கள் தந்தை, சகோதரர், கணவர், நண்பர் மற்றும் மகன்கள். இதில் பெண்களும் உண்டு. 
எங்கள் முதல் படி இந்த தவறான மற்றும் பாலியல் நகைச்சுவைகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். சாதாரண ஒளிமயமான நகைச்சுவை போல தோன்றுவது உண்மையில் ஒரு பெரிய தவறான அறிவின் வேர். ஒரே மாதிரியான பொய்களைக் கொண்டு பெண்களை அடையாளப் படுத்துவதை நிறுத்துங்கள், இந்த நகைச்சுவைகளையும் மீம்ஸ்களையும் பரப்புவதை நிறுத்துங்கள்.
காதலில் பெண்களை ஏமாற்றுக்காரிகளாக வர்ணிப்பவர்ளைப் பற்றி பிறகு பேசுவோம்.

							

Leave a Reply