ஒரு மீனவனுக்கு மீன் கொடுத்த வரம்.

Fisherman @pexels
Reading Time: 2 minutes

ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான் அவனது அம்மாவிற்கு கண் பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாக குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான்.

அப்போது கரையில் ஒதுங்கிக் கிடந்த ஒரு பெரிய மீன் ஒன்று அவனைப்பார்த்து கெஞ்சியது, மீனவனை நான் சாதாரண மீன் இல்லை கடலில் உள்ள மீன்களுக்கு எல்லாம் தலைவன் ஆழ்கடலில் வசிக்கும் நான் ஒரு பெரிய அலை சிக்கி தரையில்வந்து மாட்டிக் கொண்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன் எனக்கு ஒரு உதவி செய் மீனவனை என்னைப் பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டு சேர்த்து விட்டால் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன்.

ஒரே ஒரு வரம் தான் கேட்க வேண்டும் என்று கூறியது.மீனவன் அந்த மீனை தூக்கி படகிலும் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு என்ன வரம் கேட்பது என்று யோசித்தான் அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை.

அவன் சொன்னான் மீன்களின் ராஜாவே நீ சொன்னபடியே நான் செய்துவிட்டேன் ஆனால் என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை வீட்டுக்கு சென்று மற்றவர்களிடம் கலந்து பேசி ஆலோசித்து விட்டு நாளை வந்து கேட்கிறேன் என்று சொன்னான். மீனும் நீ ஒரே ஒரு வரம் தான் கேட்கவண்டும் என்று கூறிவிட்டு நன்றி செலுத்தி விட்டு சென்றது. மீனவனும் வீட்டிற்குச் சென்றாள் வீட்டில் பெற்றோரிடமும் மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். அவர்கள் பெற்றோரிடம் என்ன வரம் கேட்கலாம் என்று கேட்டான் அதற்கு அவர் தந்தை கூறினார். மகனே நாம் வெகு நாட்களாக இந்த ஓலை குடிசை வீட்டில் தான் வாசிக்கிறோம் ஒரு நல்ல வீட்டில் வசிக்க வேண்டும் என்று கேள், அவனது அம்மா கூறினாள் மகனே எனக்கு எனக்கு கண் பார்வை தெரியவில்லை எனக்கு கண் பார்வை வேண்டும் என்று கேள் எனக் கூறினாள், கடைசியாக அவர் மனைவி நமக்கு குழந்தைச்செல்வம் வேண்டுமென்று கேள் என்று கூறினார்கள்.

நன்கு யோசித்து அந்த மீனவன் மறுநாள் கடலுக்கு சென்று அந்த ராஜா மீனை அழைத்தான் ராஜா மீனும் மீனவனின் குரல் கேட்டவுடன் வேகமாக ஓடி வந்தது அதன்பிறகு அந்த ராஜா மீனிடம் மீனவன் ஒரே ஒரு வரம் தான் கேட்டான் ஒரே வரத்தில் அவனது பெற்றோர் அசையும், மனைவியின் ஆசையும் நிறைவேறியது, அப்படி அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா? அவன் கேட்டதோ என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை எங்கள் வீட்டு மாடியில் நின்று என் பெற்றோர்கள் பார்க்க மகிழவேண்டும் என்று கேட்டான் இதன் மூலமாக அவர் தந்தை கேட்ட வசதியான வாழ்க்கையும் அவர் தாய் கேட்டாள் கண்பார்வையும் அவன் மனைவி கேட்ட குழந்தை செல்வம் அவர்களுக்கு கிடைத்தது.

நீதி உங்களுடன் வாழ்பவர்கள் மேல் அக்கறையும் பாசமும் இருப்பின் உங்களை அறியாமலேயே உங்கள் புத்தி கூர்மையை முடிவெடுக்கும் திறமை யையும் இயல்பாகவே வெளிப்படுத்தும் என்பது உலகம் கண்ட உண்மை.

வாழ்க அன்புடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.வாழ்க அன்புடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

Leave a Reply