Site icon Chandamama

எந்தப் பாவத்தையும் செய்யாதே மனமே

Sinner @pexels
Reading Time: < 1 minute

சூதகம் ஆக பேசி மமதையில் ஏறி ஆட்டம் போடாதே நீ தேடி கூடிய சொத்துக்களில் ஒரு தூசி கூட உன்னுடன் வராது. மனைவி மக்கள் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஆசைக்கு அடிபணியாமல் குறைவின்றி செய்து முடி. தவறினால் அவர்களின் ஏக்கங்கள் பொல்லாத சாபத்தை தந்துவிடும். இறை மீது மட்டும் ஆசை கொள் எமலோகம் உன்னை நெருங்கவே நெருங்காது. பொய்யை உண்மை போல் திருத்தி கூறும் வேத நூல்களை படித்து போதனை செய்யும் போலி போதகர்கள் பின் சென்று அந்தப் போலி வேதத்தின்படி நடக்காதே பெண்ணாசையைனாள் மதிமயங்கி கிடக்காதே தீயவழியில் செல்லும் கூட்டத்தோடு கூடி சிரித்து மகிழாதே.

சடங்கு சம்பிரதாயம் என்னும் வட்டத்தினுள் சிக்கி விடாதே தன்னைத் தானே புகழ்ந்து தற்பெருமை கொள்ளாதே. நடந்தவற்றை பற்றி இனி நினைக்காதே பிறரை தலைகனியும் படி தாழ்த்தி பேசி அவர்கள் மனம் நோகும்படி செய்யாதே…..

இதைத் தவிர வேறு எதையும் பெரிதென எண்ணாதே தேவையற்ற புரளி பேசி கலவரத்தை தூண்டி விடாதே நல்ல வேதநூல்கள் சொன்ன நல்ல வழிகளை தாண்டி செல்லாதே. நீடித்து நிலைத்து பெயரை தரும் சன்மார்க்க நூல்களைத் தவிர மற்ற நூல்களைப் படிக்காத, அலைபாய்ந்த அங்குமிங்கும் ஓடும் புலனைநதும் திக்குத் தெரியாத காட்டில் நின்று விடும் என்பதை உணர்ந்து புலனைந்தும் நிலை பெற்று திகழும் கோட்டையை எப்படி எப்பாடுபட்டாவது தேடி தேடி அந்த மூலத்தை நீ அறிந்து கொண்டால் முக்தி எனும் வீட்டை அடைந்து விடலாம்…. எந்தப் பாவத்தையும் செய்யாதே மனமே அவ்வாறு செய்யாதே மனமே அவ்வாறு செய்தால் கோபம் கொண்டு உன்னை கொன்று போய்விடுவான் எந்தப் பாவத்தையும் செய்யாதே மனமே

எந்தப் பாவத்தையும் செய்யாதே மனமே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

வாழ்க இறைவனுடன்

Exit mobile version